ரஜினியின் 2.0 வெற்றி பெற கமல் வாழ்த்து

ஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கியிருக்கும் ல் 2.0 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடந்தது. இதில்  ரஜினி, அக்சய், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். கலந்துகொள்ள முடியாத  பிரபலங்கள் பலர் வீடியோ மூலமாக படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களது வாழ்த்துக்கள் திரையிடப்பட்டன.

இந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அதில், “2.0 படக் குழுவினருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நண்பர் லைகா சுபாஷ்கரனுக்கும், நண்பர் ரஜினி அவர்களுக்கும், ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும், அக்‌ஷய் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ரஜினியின் திரைப்பட வாழ்க்கையில் இன்னொரு மைல்கல்லாக இந்த 2.o திரைப் படம் அமையும் என்று அவரது ரசிகர்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன். அதற்கான எனது வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் உழைப்புக்கான ஊதியம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நண்பர் ஷங்கருக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.  அவர் எவ்வளவு பெரிய  உழைப்பாளி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த படத்தின் தொழில்நுட்பச் சுமையெல்லாம் தன் தோளில் சுமந்து இதை நல்ல ஒரு படமாக செதுக்கியிருக்கும் அவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்று கமல்ஹாசன் பேசினார்.

அடுத்து ரஜினிகாந்த் பேசுகையில் கமல்ஹாசன் – ஷங்கர் இணைந்து உருவாக்க இருக்கும் இந்தியன் 2 படத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

திரைத்துறையில் மட்டுமின்றி அரசியலிலும் எதிரும் புதிருமாக இருந்தாலும் சக போட்டியாளரை பரஸ்பரம் வாழ்த்தும் ரஜினி, கமல் இருவரையும் அனைவரும் பாராட்டினர்.