அர்ச்சனா தொடர்ந்து ரியோவை காப்பாற்ற முயற்சி செய்வதாக புகார்….!

பிக்பாஸ் வீட்டில் ரியோ மாற்றி,மாற்றி பேசுவது ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை உண்டாக்கி இருக்கிறது.

நேற்றும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றது. யார் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள் என பிக்பாஸ் கேட்டதற்கு ஆரி பெயரை ரியோ வழிமொழிந்தார். பின்னர் யார் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள் என கேட்டதற்கு அவர் ஆரி பெயரை சொன்னார். இதனால் ரசிகர்கள் இவரு ஏன் மாத்தி,மாத்தி பேசுறாரு என குழப்பம் அடைந்தனர்.

அனைவரும் ஆரி பெயரை சொன்னதை அடுத்து அவரும், ஆஜித்தும் பிக்பாஸ் வீட்டின் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்றனர். அப்போது அனிதா, பாலாஜியிடம் ஆரி, அர்ச்சனா தொடர்ந்து ரியோவை காப்பாற்ற முயற்சி செய்வதாக கூறினார். இதை பாலாஜி, அனிதாவும் ஒப்புக்கொண்டனர்.

ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக அர்ச்சனாவிடம் தெரிவித்த பாலாஜி, அதற்கு உதாரணமாக ரியோ விஷயத்தில் அர்ச்சனா நடந்து கொண்டதை சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்லையில் இன்றைய தினம் கமல்ஹாசன் போட்டியாளர்களைச் சந்திக்கும் நாள் என்பதால் முதல் புரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரத்தின் மிகவும் பேசப்பட்ட பகுதியான சனம், சுரேஷின் சண்டையைப் பற்றித் தான் பேசுகிறார். என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.