கமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்…..!

கமலின் நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்துக்கு புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் கமல் நாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார்.

‘கைதி’ படத்தை தொடர்ந்து ‘தளபதி 64’ படத்தை இயக்கவுள்ளார் . இதனை தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

‘கைதி’ படத்தை விளம்பரப்படுத்த லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டிகளில் “டெல்லி கதாபாத்திரம் ’விருமாண்டி’ படத்தில் கமல் சாருடைய கதாபாத்திரத்தின் சாயல்தான்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி