கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் ஒரே மேடையில் இணையும் மாபெரும் இசை சங்கமம்..

யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் செப்டம்பர் 12 அன்று “ஒரு குரலாய்” என்கிற பிரமாண்டமான காணொளி இசை நிகழ்ச்சியை ஆறுமணி நேரம் நேரலையாக நிகழ்த்த இருக்கிறது.

பிரபலப் பாடகர்கள்,இசைக் கலைஞர்கள் என்று எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் இந்த இசை நிகழ்வில் பங்கேற்று இசையுடன் தன் அனுபவத் தைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் கலந்து கொண்டு பல இசைக்கலைஞர்களை நினைவு கூர்ந்து திரையில் அவருடைய குரலில் பாடிய பாடல்களைப் பாட இருக்கிறார்.

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டிருக் கிற இசைக்கலைஞர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் நடக்கும் இந்த இனிய இசை நிகழ்வை ஒருங்கிணைப்பது ‘சில்வர் ட்ரீ’ நிறுவனம். இதற்கு, ‘ஊடகா’ (Oodagaa) நிறுவனம் டிஜிட்டல் ஆதரவு அளிக்க உள்ளது. அதேபோல், இன்சைடர் டாட் இன் (insider.in) என்ற வலைதளம் நிதி திரட்ட உதவியுள்ளது.

நன்கொடை வழங்க… cutt.ly/oru-kuralaai
சமூக வலைத்தளங்களில் எங்களைத் தொடர… முகநூல் – www.facebook.com/usctofficial
இன்ஸ்டாகிராம் – www.instagram.com/usctofficial
டுவிட்டர் – www.twitter.com/usctofficial