செருப்பு வீச்சு: திருப்பரங்குன்றத்தில் கூட்டத்தை பாதியில் ரத்து செய்த கமல்ஹாசன்

மதுரை:

ந்து தீவிரவாதம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கமல்ஹாசனின் நேற்றைய திருப்பரங் குன்றம் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதையடுத்து பரபரப்பை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரசார  கூட்டத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு விடுதிக்கு திரும்பினார்.

இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமலுக்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக வந்த தகவல் காரணமாக கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரசாரத்திற்கு போகாமல் இருந்த கமல், நேற்று மாலை திருப்பரங்குன்றத்தில் மீண்டும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

இதன் காரணமாக அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில்  திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், தீவிர அரசியலில் இறங்கிய நாங்கள், தீவிரமாகத்தான் பேசுவோம்; யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது, அவரை நோக்கி செருப்பு பறந்தது வந்தது.

இதன் காரணமாக  பரபரப்பு ஏற்பட்டது.   அதனைத்தொடர்ந்து,  கூட்டத்தை ரத்து செய்துவிட்ட கமல்ஹாசன் உடடினயாக போலீஸ் பாதுகாப்புடன் தங்கியிருந்த லாட்சுக்கு திரும்பி விட்டார்.

கமலை நோக்கி செருப்பு  வீசி பா.ஜ.கவைச் சேர்ந்த இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.