ரசியல் நாகரீகத்துடன் நேர்மையான மனிதர் என மக்களால் புகழப்பெறுபவர் முன்னாள் அமைச்சர் கக்கன். அவரது பேத்தி ராஜேஸ்வரி டிஐஜி ஆக பொறுப் பேற்றார். அதற்கு வாழ்த்து தெரிவித்த துடன் தனது குடும்பம் பெருமைப்படு வதாக கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி மக்கள் நீதி மய்யம் தலைவரும். நடிகருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில்,’ நேர்மையின் அடையாளமாம் கக்கன் அய்யா அவர்களின் பெரும் ரசிகர் என் தகப்பனார் திரு. D. ஸ்ரீனிவாசன். அவரின் பேத்தி, திருமிகு.ராஜேஸ்வரி அவர்கள் தமிழக டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப் பது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமையும் கூட. நாளை நமதாகட்டும் என தெரிவித்திருக்கிறார். தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். எனது தந்தை கக்கன் அவர்களின் பெரும் ரசிகர் , அவருடைய பேத்தி டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப் பது தங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை என தெரிவித்திருக்கிறார்.
டிஐஜியாக பொறுப்பேற்றுள்ள ராஜேஷ் வரிக்கு அவரது சொந்த கிராமத்தை சேர்ந்த மக்களும் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின் றன.