இந்தியன் 2 , தலைவன் இருக்கின்றான் படத்திற்காக மீசையை எடுத்த கமல்…!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் போட்டியாளர்களுடன் நடிகர் கமல் உரையாடுவது வழக்கம். அப்பொழுது தான் தனது அடுத்து இரண்டு படத்தில் நடிப்பதர்காக தன்னுடைய மீசையை எடுத்துள்ளார் என தெரிவித்தார். ஒன்று இந்தியன் 2 , மற்றொன்று தலைவன் இருக்கின்றான்.

மேலும் கமல் தனது 5 படங்களின் அறிவிப்பை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார் , இந்தியன் 2- வில் ஒரே ஒரு கமல்ஹாசன்தான். அதுவும் வயதான தோற்றத்தில் நடிக்கிறார். கமல்ஹாசனின் பேரனாக சித்தார்த் நடிக்க இருக்கிறார் .

தேவர்மகன் படத்தில் தான் சிவாஜி வேடத்தில் நடிக்க விரும்புவதாகவும் , நாளை நமதே பட தலைப்பை வாங்கிருப்பதாகவும் , மேலும் மருதநாயகம் படத்தின் நிலை குறித்து கேள்விக்கு மருதநாயகம் படத்தை கொஞ்சம் தான் தன்னால் எடுக்க முடிந்தது. மீதி படத்தை எடுக்க தொழில்நுட்ப உதவியும், வணிக ரீதியான உதவியும் தேவைப்படுகிறது. தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.உங்களை போல் எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.