நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

சென்னை:

டுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். மேலும் தேர்தலின்போது ஒத்த கட்சிகளுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அத்துடன் இயக்குனர் அமிரும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில், தமிழகத்தில் நடைபெற இருக்கும்  உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,  அடுத்த மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று தெரிவித்தார். தானும் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன், எந்த தொகுதி என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

மேலும்,  கூட்டணி குறித்து முடிவெடுக்க எனக்கு முழு அதிகாரத்தை செயற்குழு உறுப்பினர்கள் வழங்கி இருப்பதாக தெரிவித்த கமல் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

தமிழகத்தின் மரபணுவை மாற்ற துடிக்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்றவர்,  40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும்,  தமிழகத்தின் பிரச்னைகளை முன்வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

கார்ட்டூன் கேலரி