ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன்-2 .

துவக்கத்தில் இருந்தே பல சிக்கல்களை சந்தித்த இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கதை வெளியாகிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அதன்படி, இந்த படத்தில் நடிகர் சித்தார்த் ஒரு யூடியூப் சேனல் நடத்தி, ஊழல் புரியும் அரசியல்வாதிகளை பற்றி அதில் அவர் வெளியிடுகிறார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ராகுல் ப்ரீத் சித்தார்த்தின் மனைவியாக நடிக்கிறார்.

இந்த குடும்பத்தினரை காக்கவும், ஊழல்வாதிகளை பலி தீர்க்கவும் நேதாஜி (கமல்) இந்தியன் தாத்தாவாக களமிறங்குகிறார். ப்ரியா பவானி சங்கர் ஒரு பத்திரிக்கையாளராக நடிக்கிறார். காஜல் அகர்வால் தற்காப்பு கலைகளை பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளராக நடிக்கிறார்.

இது தான் இந்த படத்தின் கதை என வைரலாகி வருகிறது. இது குறித்து படக்குழு எதையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது .

இந்த நிலையில் தற்போது தான் கமல்ஹாசன் அவர்கள் ஷங்கருடன் இணைந்துள்ளார் . இடைவெளி இல்லாமல் மூன்று மாதத்திற்குள் தன் கதாபாத்திரத்தை முடித்து தருவதாக கூறியுள்ளார் , நவம்பரில் தன் கட்சி பணிக்காக தான் நேரம் செலவிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார் .

இதனால் ஓய்வின்றி மூன்று மாதங்கள் சென்னை , ஆந்திரா , தைவான் என ஷூட்டில் முழு வீச்சில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது .