கொல்கத்தா:

ன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், அங்கு திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டு இருப்பதாகவும், திரிணாமுல் கட்சியை ஆதரித்து அந்தமானில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் பரபரப்பு நிலவி வரும் சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தில் நாடாளுமன்ற  தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்,  இந்திய குடியரசு கட்சியுடனும் கூட்டணி அமைத்துள்ளது. அதையடுத்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்ட கமல்ஹாசன்,  தான் போட்டியிடவில்லை. தனது கட்சிக்காகவும், வேட்பாளர்களுக்காக மட்டுமே உழைக்க உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.  மக்கள் நீதி மய்யம் கட்சி பேட்டரி டார்ச் லைட் சின்னத்தில் போட்டிட உள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசன் இன்று காலை திடீரென கல்கத்தா புறப்பட்டு  சென்றார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது அந்தமான் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அந்தமானில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.