‘இந்தியன்-2’ படம் சர்ச்சைக்கு உள்ளாகலாம்: கமலஹாசன்

சென்னை,

ரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இந்தியன்-2 படமும் சர்ச்சைகளில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.  மேலும், எந்தவித சர்ச்சையும் இல்லாத பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி குழந்தைகள்மீது கல்லெறிந்து பெரும் அபத்தம் என்றும் கூறினார்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த நடிகர் கமலஹாசன், பிப்ரவரி 21ந்தேதி கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரியில் கலந்துகொண்டு மாணவர்களி டையே உரையாற்றிய கமல்,

இந்நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமலஹாசன்,  இந்தியன்2-ல் தான் தற்போதைய அரசியலைப் பற்றிய முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.

ஏற்கனவே பல திரைப்படங்களில் ஊழல் குறித்தும், அது தடுக்கப்பட வேண்டும் என்பதை  வெளிப்படுத்தி உள்ள நிலையில்,  தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கடந்த காலம் போல திரைப்படங்கள் தயாரித்து வெளியிடுவது முடியாது என்றும் கூறினார்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வெளியான  “அபே சிவம்” போன்ற படங்கள்  இன்று தயாரிக்க  முடியாது என்ற கமல், நான் அதுபோன்ற ஒரு  படத்தை தற்போது தயாரித்தால்  நீதிமன்ற வழக்குகள் வரும் என்றார்.

ஏற்கனவே வெளியான தசாவதாரம் படத்தை இப்போது,  தயாரித்தாலும்  நீதிமன்ற வழக்குகள் போடப்படும் என்றும், வறுமையின் நிறம் சிவப்பு படம் தயாரித்தாலும் நான் சிக்கலை சந்திக்க வேண்டியது வரும் என்று குறிப்பிட்ட கமல், தற்போது நடித்து வரும், இந்தியன்-2க்கும்  எதிராக என்ன பிரச்சினை உருவாகும் என்று யாருக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய,  பத்மாவத் திரைப்படத்தில் எந்தவித சர்ச்சையான கருத்துக்களும் இல்லை என்றும், அந்த படத்தில் என்ன சர்ச்சை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்காக பள்ளி குழந்தைகளின் வாகனத்தின் மீது கல்லெறியப்பட்டது அபத்தமானது என்றும் கூறினார்.

மிழ்நாட்டின் அரசியல் நிலைமை பற்றி, தனது டுவிட்டர் பதிவில் தொடர்ந்து டுவிட் செய்த கமல்,   பின்னர் சொந்தக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார். விரைவில் அவர் நடித்து முடித்துள்ள விஸ்வரூபம் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியன்2 படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் என்ற திரைப்படத்தை பிரபல டைரக்டர் ஷங்கர் இயக்கினார். அதில் ஊழல், லஞ்சத்துக்கு எதிராக நடிகர் கமலஹாசன் இரு வேடங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2-ல் மீண்டும் கமலஹாசன் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தைவானிலும் நடைபெற்றது. இந்த படமும் ஓரிரு மாதங்களில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல்ஹாசன் இதை தெரிவித்துள்ளார்.