லோகேஷ் கனகராஜ் படத்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன்….?

தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் மாஸ்டர் படத்தின் புது ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை சென்ற வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இணையும் படத்திற்கு 232 என பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த படத்திற்கு எவனென்று நினைத்தாய் என்கிற தலைப்பு வைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் அனிருத் இதற்கு இசை அமைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் தனது படத்தில் லோகேஷ் கனகராஜுடன் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அது என்ன என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

கமல்ஹாசன் அறிமுகப்படுத்த உள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் படத்தின் தயாரிப்புக்கு ஆகும் நாட்கள் குறைக்கப்படும் என கூறப்படுகிறது. அது என்ன என்பது பற்றிய விவரம் கூடிய விரைவில் தெரிய வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.