அர்ஜுன் தாஸின் ‘அந்தகாரம்’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்…..!

A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருந்தார் அட்லீ .

இதனை தொடர்ந்து இவர் தயாராரித்துள்ள அந்தகாரம் படத்தில் கைதி,மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை விக்னராஜன் இயக்கியுள்ளார்.பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் Netflix தளத்தில் நவம்பர் 24ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது அந்தகாரம் படக்குழுவினரை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.இது குறித்து அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.