அந்தமான்:

ந்தமான் தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அந்தமானில் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் அந்தமான் புறப்பட்டு சென்றுள்ளார்.

கமல்ஹாசன் – மம்தா (பைல் படம்)

வித்தியாசமான சிந்தனையும், மக்களுக்கு புரியாத மொழியில் பேசும் அதி மேதாவியான மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல் ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில், தமிழக கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாமல்,மேற்கு மாநிலத்தில் உள்ள திரிணாமுல் கட்சியுடன் உடன்பாடு செய்துள்ளது. தேசிய நீரோட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் விதமாக மம்தாவின் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதாக கமல் தெரிவித்தார். இது  கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில்,  அந்தமானில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் இன்று அந்தமானில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அந்தமானில் தமிழர்கள் அதிகம் பேர் வசித்து வரும் நிலையில், அவர்களின் ஆதரவு  திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அயான் மொன்டலுக்கு ஆதரவு கோரி கமல்ஹாசன் இன்று அந்தமானில் பிரசாரம் மேற்கொள்கிறார்.