கமல்ஹாசனின் அடுத்த படம் ‘தலைவன் இருக்கிறான்’: அரசியல் படமா?

கமல்ஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். இதன் இரண்டாவத பாகம் முடிவடையும் நேரத்தில் சில காரணங்களால் தடைபட்டது.

அதன் பின் கமல்ஹாசன் வேறு சில படங்களில் நடித்தார். பிறகு, தசாவதாரம் படத்தில் இடம் பெற்று ரசிகர்களை கவர்ந்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘சபாஷ் நாயுடு’ படத் தயாரிப்பில் இறங்கினார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், பல்ராம் நாயுடு படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. அந்த படத்துக்குப் பிறகு ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை தொடங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சமீபகாலமாக, அவர் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ‘தலைவன் இருக்கிறான்’ என்கிற தலைப்பில் அவர் நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.