கமலுக்கு மனநிலை சரியில்லை!! பாஜக

சென்னை:

கமல் மனநிலை சரியில்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியவர் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார் கூறுகையில், ‘‘கமலுக்கு மனநிலை சரியில்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியவர். அவமரியாதை செய்யும் வகையிலான இந்த அரசியல் சரியில்லை.

தனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் கமலிடம் கிடையாது. கமல் மீது தமிழக பாஜக சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்’’ என்றார்.