சேலம்:

முதுகெலும்பு இல்லாத நடிகர் கமல் ஒருபோதும் தமிழக முதல்வராக முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற ஆடிட்டர் ரமேஷ் 4-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரதியஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஆடிட்டர் ரமேஷ் இறந்து 4 ஆண்டுகள் ஆகியும், வழக்கு விசாரணை நடைபெறாதது துரதிர்ஷ்டமானது, கண்டிக்கத்தக்கது. அதுபோல  வேலூர், ஆம்பூர், பரமக்குடி, கோவை பகுதிகளில் உள்ள இந்து அமைப்பு  நிர்வாகிகளை படுகொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தமிழக அரசுமீது குற்றம் சாட்டினார்.

மேலும், பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள்  செய்து கொடுக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்ததுள்ளது. இதற்காக அவர் 2 கோடி பணம் லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இது அவருடைய பணத்திமிரை காட்டுகிறது.

மன்னார்குடி குடும்பம் செய்த தவறுக்கு சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார் என்றார்.

மேலும், நடிகர் கமலஹாசன் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,  அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது என்றும்,

ஆனால் கமலஹாசன்  விஸ்வரூபம் படம் வெளியாகும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பல அமைப்புகள் போராட்டம் நடத்தியதற்கு,  நாட்டை விட்டே செல்கிறேன் என்று கூறினார்.

இதற்கே இப்படி செல்கிறார் என்றால் இவர் முதல மைச்சரானால் வெளிநாட்டுக்கே சென்று விடுவார். தமிழ்நாட்டின் கதி என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

முதுகெலும்பு இல்லாத கமலஹாசன்  ஒருபோதும் முதலமைச்சர் ஆக முடியாது என்று அதிரடியாக கூறினார்.

மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய  சேலம் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது சரியான நடவடிக்கையே என்றார்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.