திருவாரூர் : கமலஹாசன் பேனர் நீக்கம்.

திருவாரூர்

யக்குனர் கே. பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் வைத்த கமலஹாசன் பேனர்கள் போலீசால் அகற்றப் பட்டு மீண்டும் வைக்கப்பட்டன.

திருவாரூரை அடுத்த நன்னிலம் அருகே நல்லமாங்குடியில் கே. பாலசந்தர் சிலை திறக்கப்பட உள்ளது.  இது கே. பாலசந்தர் பிறந்த ஊராகும்.  இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துக் கொள்ள உள்ளனர்.

இந்த விழாவுக்கு வருகை தரும் கமலஹாசனுக்கு அவருடைய ரசிகர்கள் பல வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர்.   அவற்றை  திடீரென்று போலிசார் அகற்றினர்.   காரணம் கேட்ட ரசிகர்களிடம் அவை முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டதாக போலீசார் கூறினார்கள்.

பிறகு ரசிகர்கள் முறையான அனுமதி பெற்று அகற்றப்பட்ட பேனர்களை மீண்டும் வைத்தனர்.   இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சிறிது பரபரப்பை உண்டாக்கியது.  ஒரு ரசிகர், கமலஹாசன் அரசியலுக்கு வருவதாக சொல்லப்படுவதற்கும் இதற்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமோ என சந்தேகம் தெரிவித்தார்.