நடிகர் கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் மறைவு

லண்டன்:

டிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக லண்டனில் காலமானார். அவருக்கு வயது 82.

ராஜ்கமல் இன்டர் நேசனல் திரைப்பட நிறுவனத்தின் நிர்வாகியாக சந்திரஹாசன் இருந்தார். அவரது மனைவி கீதா. இவர் கடந்த ஜனவரி மாதம் மறைந்தார்.

இத் தம்பதியருக்கு நிர்மல்ஹாசன் என்ற மகனும் அனுஹாசன்  என்ற மகளும் உள்ளனர். அனுஹாசன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் மகள் அனுஹாசன் வீட்டிற்குச் சென்ற சந்திரஹாசன் அங்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று மறைந்தார்.

அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டுவருவது பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published.