கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர்: எச்.ராஜா புதிய தகவல்

சென்னை:

மலஹாசன் ஒரு கிறிஸ்தவர் என்று பாஜக தேசிய செயலாளர்  எச்.ராஜா  தெரிவித்துள்ளார். இதற்காக புதிய தகவலையும் தெரிவித்து உள்ளார்.

அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகர் கமல்ஹாசன். அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் அவர்மீது கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கமல்ஹாசன் ஒரு கிறிஸ்தவர் என்றும், அவரது கட்சி கிறிஸ்தவ அமைப்பால் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

தன்னை நாத்திகனாக கமலஹாசன்  சித்தரித்து கொண்டாலும் அவர் ஒரு கிறிஸ்தவர்.  அவருடைய மக்கள் நீதி மய்யம்  அரசியல்  கட்சி நேச்சு பில்லியன் பிடோபில் சர்ச் பின்னணியில் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  லண்டனில் இறந்த போது, அங்குள்ள  சர்ச்சின் நல்லடக்கம் செயய்ப்பட்டது என்றவர், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரின் மற்றொருஅண்ணன் சாருஹாசன் பேசும்போதும் கிறிஸ்தவம் குறித்துதான் பேசினார் என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும், கமல்ஹாசனிடம்  கரன்தாப்பர் எடுத்த பேட்டியின்போதும்,  கமல் இயேசுவின் குரலை பரப்பிக்கொண்டிருப்கபதாகவே கூறி உள்ளார். அதுமட்டுமின்றி அவருடைய மற்றொரு சகோதரர்  பாஸ்டருக்கு படித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். கமலின் குடும்பம் முழுவதுமே கிறிஸ்தவ குடும்பம் என்று விமர்சித்த ராஜா, அதைத்தான் அவரது அன்பே சிவம் படத்தில் விபூதியை அழிப்பதுபோலவும், சிலுவையை அணிவது போலவும் காண்பித்தார் என்று தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பேசிய ராஜா,  இந்து அடையாளம் தேவையில்லை என்று கூறும் கமல், இந்தியா என்ற அடையாளம் போதும் என்று சொல்கிறார்… ஆனால், அவர் கிறிஸ்தவமும் தேவையில்லை என்று கூறியிருந்தால் வரவேற்கலாம். ஆனால், அவர் அப்படி கூறவில்லை.  ஆனால் அவர் தீய நோக்கத்துடன் பேசியிருப்பதால், அவரை ஒவ்வொரு இந்து உணர்வாளர்களும் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு ராஜா கூறினார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிறிஸ்தவ அமைப்புகள் நிதிஉதவி செய்வதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்துள்ளன. அவரது மய்யம் பதிவு செய்யப்பட்டு உள்ளதும் ஒரு கிறிஸ்தவ அமைப்பின் பெயரில்தான் என்றும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இவை எதற்கும் கமல்ஹாசன் நேரடியாக பதில் தெரிவிக்கவில்லை.

கட்சி தொடங்கிய போது  ஈரோட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமலிடம் அவரது கட்சி பதிவு செய்யப்பட்டுள்ள குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கமல், “இது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இதற்கு சிரிப்புதான் வருகிறது” என்று இறுதிவரை பதில் தெரிவிக்காமல் நழுவியது குறிப்பிடத்தக்கது.