காவல்துறைக்கு கமல் பாராட்டு!

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும்  காவல்துறையினருக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு நன்றி. நல்ல குடிமகன்கள் சீருடை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரகாசிப்பார்கள். காவலர்களைப் போல் தமிழர்களும் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.