சென்னை:

தன்னை கைது செய்தாலும் சட்டம் பாதுகாக்கும் என்று கமல் ஆவேசமாக தெரிவித்துளஅளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு  கொடுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளிப்பதற்காக அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், “ பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக என்னை கைது செய்ய வேண்டும் என்று பலர் சொல்லி வருகிறார்கள்.  அது பற்றி எனக்கு கவலை இல்லை.   சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கறது. நீதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அந்தச் சட்டம் – நீதி என்னை பாதுகாக்கும்.

என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது நடக்கட்டும். என்னை கைது செய்யச் சொல்லும் கூட்டத்துக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது” என்று ஆவேசத்துடன் கமல் தெரிவித்தார்.

மேலும் அவர், “ என்னை சிறையில் அடைத்து பார்க்க வேண்டும் என்பவர்களும் என் ரசிகர்கள்தான்” என்று கூறினார்.