தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு கமல் வரவேற்பளித்துள்ளார்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர். அந்த ஆலையை உடனடியாக மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் பேரணி சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தனர்.

இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். நடிகர் கமல்ஹாசனும் இந்த முடிவுக்கு வரவேற்பு  அளித்துள்ளார். மேலும், “தூத்துக்குடியில் மக்கள் பாடம் கற்பித்துவிட்டனர்” என்று அவர்  குறிப்பிட்டுள்ளார்.