கமல் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்: அன்புமணி பங்கேற்பு

சென்னை:

க்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருந்த அனைத்து கட்சி கூட்டத்தை திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் புறக்கணித்த நிலையில், பாமக  மற்றும் விவசாய அமைப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். மேலும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் அழைப்பு விடுத்தார்.

ஆனால், கமலின் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்தன. இந்நிலையில், திட்டமிட்டபடி,  சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், காவிரியில் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் கமல் ஹாசன் தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். மேலும், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டுள்ளார்.

இவர்களுடன்  அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு, உள்பட விவசாய சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். ஆலோசனை நடைபெற்று வருகிறது.