பட்டு வேட்டி சட்டையில் கடாரம் கொண்டான் படப்பிடிப்பு தளத்தில் கமல்…!

விக்ரம் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கடாரம் கொண்டான்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘சாமி ஸ்கொயர்’ படம் போலவே இதிலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் விக்ரம்.

இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு கமல்ஹாசன் சென்றது அனைவரையும் கொண்டாட வைத்துள்ளது. அதிலும் கமல் அணிந்து சென்ற பட்டு வேட்டி சட்டை தான் இன்றைக்கான டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'Kadaram Kondan, Kamal, RAJESH SELVA, vikram
-=-