கமல்தான் முதல்வர் வேட்பாளர்! இப்போதே ‘துண்டுபோட்ட’ நடிகை ஸ்ரீபிரியா…..

சென்னை:

மிழகத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்  இணைந்து தேர்தலை சந்தித்தால்,  கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்று  நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டுதான் நடைபெற இருக்கும் நிலையில், கமல் கட்சியைச் சேர்ந்த நடிகை ஸ்ரீபிரியா, இப்போதே, முதல்வர் பதவி கமலுக்குத்தான் என்று ரஜினி ரசிகர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக துண்டுபோட்டு இடத்தை பிடித்துள்ளார்.

நடிகை ஸ்ரீபிரியாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் மகளிரணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அவரிடம் செய்தியாளர் ஒருவர், ரஜினி கமலுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்களே என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீபிரியா, அவ்வாறு இருவர்களும் இணைந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டால், அந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்தான் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்து உள்ளார்.

ரஜினி இன்னும் கட்சியே தொடங்காத நிலையிலும், கமல்ஹாசன் கட்சித்தொடங்கி இதுவரை ஒரு இடத்தைக் கூடி பிடிக்காத நிலையிலும், முதல்வர் வேட்பாளர் ரேஞ்சுக்கு கமல்ஹாசனை, நடிகை ஸ்ரீபிரியா கூறியிருப்பது தமிழக மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி முதல்வர் வேட்பாராளக அறிவிக்கப்பட்டு விடுவாரோ என்ற பயத்தில் ஸ்ரீபிரியா, இப்போது, கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறியிருப்பதாக சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது..

கார்ட்டூன் கேலரி