சென்னை

றைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க கமலஹாசன் மும்பை செல்கிறார்.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ஆம் தேதி இரவு துபாயில் மரணம் அடைந்தார்.  அவரது உடல் இன்னும் துபாய் போலிசார் அனுமதி அளிக்காததால் இந்தியா வர தாமதம் ஆகி வருகிறது.    இன்று மாலை அவரது உடல் இந்தியா வரும் எனவும் இன்று அல்லது நாளை அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் அவருடன் பல படங்களில் நடித்துள்ள கமலஹாசன் இன்று பிற்பகல் விமானம் மூலம் மும்பை செல்ல உள்ளார்.    ஸ்ரீதேவி கதாநாயகியாக முதன் முதலில் நடித்த மூன்று முடிச்சு படத்தில் கமலஹாசன் அவருக்கு இணையாக நடித்துள்ளார்.  மேலும் கமலுடன் மூன்றாம் பிறை,  மீண்டும் கோகிலா, குரு, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு உட்பட பல படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார்.