மு.க. ஸ்டாலினை முந்தி முதல்வர் ஆவார் கமல்!: பிரபல ஜோதிடர் கணிப்பு

 

ஸ்டாலின் – கமல்

டில்லி :

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை முந்திக்கொண்டு நடிகர் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஆவார் என்று  பிரபல ஜோதிடர் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த 7-ஆம் தேதி அன்று தனது பிறந்த நாள் விழாவில், நிச்சயமாக தனிக்கட்சி துவங்குவேன் என்றும் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

மேலும், கட்சி துவங்க 30 கோடி ரூபாய் தேவை என்றும் அதை தொண்டர்களும், ரசிகர்களும் அளிப்பர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நாளில் நடிகர் கமல் பிறந்தநாளையொட்டி கடந்த 6-ம் தேதி டில்லியைச் சேர்ந்த தமிழ் தெரிந்த ஜோதிடர் ராடன் பண்டிட் என்பவர் தனது யூடியூப் சேனலில் கமல் குறித்த சில கணிப்புகளை கூறியுள்ளார்.

ராடன் பண்டிட்

அதில், “கமல் மிகுந்த  புத்திசாலி, அறிவாளி. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போகும் நபர் யார் என்று சினிமா நட்சத்திரங்கள் சிலரது ஜாதகங்களை ஆராய்ந்தேன்.

அப்போது கமலின் ஜாதகத்தை கணித்தேன். அவர் நல்ல நிர்வாகி, சொல்வதைதான் செய்வார்:  செய்வதைத்தான் சொல்வார். அவர் மிகுந்த பிடிவாதம் குணம் உள்ளவர். தான் நினைத்ததை சாதிப்பார்.

இவரது ஜாதகம் யோக ஜாதகம். இவருக்கு 20 ஆண்டுகளுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு நிச்சயமாக முதல்வர் ஆவார். தி.மு.க.வுக்கு கடும் போட்டியாக இருப்பார். மு.க. ஸ்டாலினை முந்தி, கமல் முதல்வர் ஆவார்.

அவருக்குத் தேவையான நிதி, நேர்மையான வழியில் எளிதாக வரும். வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களும் அவருக்கு நிதி அளிப்பார்கள்” என்று ராடன் பண்டிட் தெரிவித்துள்ளார்.