அஜித் இன்னுமா ஹீரோ : கலாய்க்கும் கமால் கான்

 

கமால் கான் தன்னை நடிகர்,  தயாரிப்பாளர், விமர்சகர் என எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும்.   ஆனால் பொதுமக்கள் அவரை பிரபலங்களை பெர்சனலாக கலாய்ப்பவர் என்று தான் அடையாளம் காட்டுவார்கள்.   அந்த கமால் கான் இப்போது சர்ச்சையில் சிக்கி இருப்பது அஜித் குமார் பற்றிய கமெண்டுதான்.

 

கமால் கான்

ஏற்கனவே இணயங்களில் அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் இடையே பங்காளி சண்டை நடப்பதை தமிழ் உலகமே அறியும்.   இதில் கமால்கான் விவேகம் ரிலீசின் போது பதிந்த ஒரு டிவீட்டுக்காக ரெண்டு ரசிகர்களும் இன்னும் அங்கே வார்த்தையால் கமால் கானுக்கு அர்ச்சனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கமால் கான் “அஜித் ஜி,  உங்களைப் போல வயதான நடிகர்கள் எல்லாம் பாலிவுட்டில் அப்பா வேடம் போடும் போது, தமிழ் மக்கள் எப்படி உங்களைப் போய் இன்னும் கதாநாயகானாக ஒப்புக் கொள்கிறார்கள் என புரியவே இல்லை.   விவேகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என டிவீட்டில் பதிந்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளனர்.   ஆச்சரியமாக கமால் கானை திட்டுவதிலும் கண்டபடி விமரிசிப்பதிலும் விஜய் ரசிகர்களும் பங்கு கொண்டுள்ளனர்.    இது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.