கருணாநிதியுடன் கமல் சந்திப்பு

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் கமல் இன்று சந்தித்து பேசினார்.

வரும் 21ம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள கமல் சென்னையில் இன்று நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கமல் கோபாலபுரம் சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் கருணாநிதியுடன் கமல் சந்தித்து பேசியுள்ளார்.

 

தொடர்ந்து கமல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற வந்தேன். எனது அரசியல் பயணம் குறித்து கருணாநிதியிடம் கூறினேன். எனது கொள்கையை புரிந்து கொண்ட பின்னர் திமுக.வுடன் கூட்டணி குறித்து யோசிக்கலாம். தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் போது எனது கொள்கையிலும் திராவிடம் இருக்கும்’’ என்றார்.