சென்னையில் ரஜினியுடன் கமல் சந்திப்பு

--

சென்னை:

சென்னையில் ரஜினிகாந்த்தை கமல் இன்று சந்தித்து பேசினார்.

நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை வரும் 21ம் தேதி முதல் தொடங்குகிறார். இதனால் பல தலைவர்களை அவர் சந்தித்து பேசி வருகிறார்.

கேரளா முதல்வர் பினராய் விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நல்லக்கண்ணு, முன்னாள் தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த வகையில் இன்று நடிகர் ரஜினியை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதன் பின்னர் கமல் கூறுகையில், ‘‘அரசியல் பயணத்துக்கு செல்வதால் எனக்கு பிடித்தவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறேன். ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது. அரசியல் ரீதியானது இல்லை’’என்றார்.