கொல்கத்தா,

ர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற கொல்கொத்தா சென்றுள்ள நடிகர் கமலஹாசன் அங்கு, மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.

அரசியல் கட்சி தொடங்குவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ள கமல் இன்று காலை கொல்கத்தா புறப்பட்டு சென்றார். அவர் மம்தா பானர்ஜியை சந்திக்க செல்வதாக கூறப்பட்ட நிலையில், அவர்  அங்கு நடைபெறும்  சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவே சென்றதாக கூறப்பட்டது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அரசியல் ஆலோசனை பெற்ற கமலஹாசன், பின்னர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று மாலை கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள நடிகர் கமல் கல்கத்தா புறப்பட்டு சென்றார்.

கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட திருவிழா இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திரையுலக பிரபலங்கள்  கலந்து கொள்கின்றனர். இந்த  விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  அதையேற்று அவர் கொல்கத்தா சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை திரைப்பட விழா நடைபெற உள்ள அரங்கில் சந்தித்தார் நடிகர் கமலஹாசன்.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு,  தான் சர்வதேச திரைப்பட விழாவில் மட்டுமே பங்கேற்க வந்ததாகவும், மரியாதை நிமித்தமாகவே முதல்வரை சந்தித்தாகவும் கூறினார்.