போபால்:

த்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் ஏற்றது முதல் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வலுவான இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. தற்போது பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பாஜக தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது.

300 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் 114 இடங்களை  பிடித்த காங்கிரஸ் பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன்  15ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முடிவுகட்டிவிட்டு  ஆட்சியை கைப்பற்றியது. மாநில முதல்வராக கமல்நாத் பதவி ஏற்றார்.

அவரின் நிர்வாகத் திறமை காரணமாக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. பாஜகவுக்கு தொடர்ச்சியான பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில், பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்ட பவாய் சட்டமன்றத் தொகுதியில் விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் காங்கிரஸ் தனது பெரும்பான்மை அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே  கடந்த மாதம் நடைபெற்ற  இடைத்தேர்தலில் ஜாபுவா இடத்தை பாரதிய ஜனதா கட்சி இழந்தது, 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் அதன் எண்ணிக்கையை 108 ஆக குறைத்தது. ஜாபுவா வெற்றியுடன் அதன் எண்ணிக்கையை 115 ஆக உயர்த்தியது காங்கிரஸ் கட்சி.

தற்போது, மத்திய பிரதேச சட்டமன்றத் தலைவர் பாஜக எம்எல்ஏ பிரஹ்லாத் லோடியை தகுதி நீக்கம் செய்ததையடுத்து, பவாய் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது  மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 229 ஆகக் குறைந்துள்ளதால், மாநில காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.

“ஜாபுவா வெற்றிக்குப்  பிறகு காங்கிரஸ் கட்சியின் பலம்  115 இடங்களாக உயர்ந்து வலுவாக மாறி உள்ளது. இந்த நிலையில், நடைபெற உள்ள  பவாய் இடைத்தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ கட்சி 116 இடங்களாக உயர்ந்து, வலுவாக இருப்போம் என்று மாநில காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் உறுதி தெரிவித்து உள்ளார்.

“எங்கள் அரசாங்கம் வலுவானது மற்றும் நிலையானது ” என்று கூறியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓசா,  மாநில சட்டசபையில்  பாஜகவின் இடம் 107 ஆக குறைந்துள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது,  மத்திய பிரதேசத்தில் ஒரு இடத்தை தவிர மற்ற அனைத்தையும் கட்சி வென்ற போதிலும் மாநில பாஜக தலைவர் ராகேஷ் சிங் தலைமை மீது அதிருப்தி நிலவி வருகிறது.

மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ், தண்ணீரில் தத்தளிக்கும் படகு என பாஜகவினர் விமர்சித்து இருந்த நிலையில், தற்போது மாநில காங்கிரஸ் கட்சி வலுவாக மாறி உள்ளது. தேவையான பெரும்பான்மையுடன் மாநில அரசு ஆட்சி நடத்தி வருகிறது…  கமல்நாத் தலைமையிலான அரசாங்கம் இதுவரை பாஜகவை விட அதிக பலத்துடன் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், ஏற்கனவே நாங்கள் ஆட்சி அமைக்க  இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள், ஒரு எஸ்பி எம்.எல்.ஏ மற்றும் நான்கு சுயேச்சைகள் ஆதரவு அளித்து வந்தனர். ஆனால், ​​ஜாபுவா வெற்றிக்குப் பிறகு எங்களிடம் 115 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மக்களின் ஆதரவோடு அமோகமாக வளர்ந்து வருகிறது என்று பெருமிதமாக தெரிவித்து உள்ளார்.