மத்தியபிரதேச பாஜ ஆட்சிக்கு ‘சங்கு’ ஊதுங்கள்: கடவுள் சிவனுக்கு காங். கமல்நாத் கடிதம்

உஜ்ஜையினி:

த்தியபிரதேசத்தில் பி.ஜே.பி ஆட்சிக்கு முடிவுகட்டுங்கள் என்று என்று உஜ்ஜைனியின் கடவுளான சிவனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத் திறந்த மடல் எழுதி உள்ளார்.

மக்கள் விரோத ஆட்சி செய்து வரும் மத்தியப் பிரதேச மாநில  பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டி, மாநில  மக்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று சிவனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய பிரதேசம், சத்திஸ்கர் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலங்களில் தேர்தல் குறித்த நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான உஜ்ஜையினி மஹாகாலேஷ்வர் கோவில் அமர்ந்துள்ள சிவனுக்கு, பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருமாறு தான் கடிதம் எழுதி இருப்பதாக, காங்கிரஸ் மூத்த தலைவர்  கமல்நாத்  அந்த கடிதத்தை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜவின் மக்கள் விரோத ஆட்சி காரணமாக, விவசாயிகளின் தற்கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஊழல் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளன”

பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு சிவன் அருள் புரிய வேண்டும் எனவும் தமது கடிதத்தில் கமல்நாத் குறிப்பிட்டுள்ளார்.

ம.பி. சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, ” மக்களின் அருள் வேண்டி யாத்திரை” என்ற பிரசாரத்தை, பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்க இருப்பதும், அந்த யாத்திரையை அமித்ஷா தொடங்கி வைக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.