‘எவனென்று நினைத்தாய்’ கமல் – லோகேஷ் கனகராஜ் படத் தலைப்புக்கு படக்குழு மறுப்பு….!

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு செப்டம்பர் 16 வெளியானது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் நாயகனாக நடிக்கவுள்ளார்.

கமல் நடிப்பில் உருவாகும் 232-வது படமாக இது அமைந்துள்ளது. படத் தலைப்பு குறித்து எந்தவொரு தகவலுமே இதுவரை இல்லை.

ஆனால், லோகேஷ் கனகராஜ் படம் தொடர்பாக ட்வீட் செய்யும்போது ‘எவனென்று நினைத்தாய்’ என்று குறிப்பிட்டு இருந்தார். உடனடியாக இதுதான் தலைப்பு என்று பலரும் குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வந்தனர். இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இன்னும் படத்துக்கு எந்தவொரு தலைப்புமே இறுதி செய்யவில்லை எனவும் படக்குழுவினர் குறிப்பிட்டனர்.