‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்று (நவம்பர் 7) கமல் பிறந்த நாளை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. அதன்படி தற்போது இந்தப் படத்துக்கு ‘விக்ரம்’ என அறிவித்துப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்புக்கான டீஸரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது.