கமல் கட்சி சப்பாணி குழந்தை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு

நாகர்கோவில்:

டிகர் கமல்ஹாசன் தொடங்கி உள்ள கட்சி  சப்பாணி குழந்தை; அது கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது அவசியம் என்று தமிழக  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக தாக்கி பேசினார்.

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலுவலக சம்பந்தமாக நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்து கடுமையாக விமர்சித்தார்.

கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறார். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல் நாடகம் ஆடுகிறார். அது தேர்தலுக்கு ஒத்துவராது. நடிகர் கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. இந்த கட்சி வளர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பெரும் ஆபத்து என்று கூறினார்.

கமல் வெளிநாட்டு தீய சக்திகளுடன் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் உள்ளது.  கமல் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் வந்தால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வுதான் நிற்கும். மற்ற கட்சிகள் இல்லாமல் போய் விடும்.

அ.தி.மு.க.வுக்கு எதிரி தி.மு.க. தான். தனக்கு வந்த சிறிய பிரச்சனையை கூட தாங்க முடியாமல் வெளிநாட்டுக்கு செல்வேன் என்று கூறிய கமலால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியாது.

திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தொண்டர்கள் எங்களிடம் வலுவாக உள்ளனர்.

ரஜினி ஆன்மீகத்தை சார்ந்தவர். நல்ல மனிதர். எம்.ஜி.ஆர். மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர்.

இவ்வாறு அவர் கூறினார்.‘