ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது .

இதனிடையே, 2021-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளையும் கவனிக்கவுள்ளார் கமல். மேலும், ‘பிக் பாஸ் 4’ படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதால் அதன் பணிகளையும் கவனித்து வருகிறார்.

தற்போது தமிழக அரசு, திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட்டதால், கமல் காட்சிகளை மட்டும் ஜனவரிக்குள் முடித்துவிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. கமல் காட்சிகளை மட்டும் ஜனவரிக்குள் முடித்துவிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.