அர்ச்சனா தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்…?

நாமினேஷனில் இருந்து ரியோ மற்றும் ஆரியை கமல் நேற்று காப்பாற்றி உள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், எவிக்ஷன் பட்டியலுடன் வருகிறார் கமல். அப்போது ஆஜீத், சோம், அர்ச்சனா ஆகியோர் பட்டியலில் உள்ளனர். முட்டையை உடைக்கும் படி கமல் கூற, ஆரி மற்றும் பாலாஜி முட்டையை உடைக்கின்றனர். நகர்ந்து நகர்ந்து இருக்கையின் ஓரத்திற்கு வந்த ஆஜீத்தை பார்த்து இது தான் edge of the seat-ஆ என்று கேட்கிறார் கமல். ஆஜீத் காப்பாற்றப்படுவார் என்று ஆரி ஒரு புறம் கருத்தை முன்வைக்கிறார்.

இரண்டாம் ப்ரோமோவில், அர்ச்சனா தன் முட்டையை பாதுகாத்த விதம் நன்றாக இருந்ததென கூறினார். நிஜமாகவே கோழியாக மாறியிருந்தார் எனவும் பாராட்டினார். திடீரென வெடித்த அந்த கோபம் ஏன் ? என கமல் கேட்க… சோம் அப்படி செய்ததால் தான் கோபம் வந்தது என அர்ச்சனா கூறினார். கோழிப்பண்ணை டாஸ்க்கில் முட்டையை எரித்து கிழித்த போது வராத கோபம்… இப்போ ஏன் என்று கமல் தனது கேள்வியால் மடக்கியுள்ளார்.

இந்நிலையில் அர்ச்சனா தான் இந்த வார எவிக்ஷன் என்று கூறப்படுகிறது.