“அய்யோ.. வேண்டாம்!” : கமலும் ஒதுங்கினார்!

kamal hasan

“அய்யோ.. வேண்டாம்!” : கமலும் ஒதுங்கினார்!

டிகர் சங்க தேர்தலில் ( nadigar sangam elections ) வெற்றி பெற்ற பாண்டவர் அணி, சங்க நிர்வாகத்தில் பலவித மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சங்கத்தின் கவுரவ தலைவராக ரஜினியையும் ( super star rajinikanth ), கவுரவ ஆலோசகராக கமலையும் ( kamal hasan ) நியமிக்க முடிவு செய்தார்கள்.

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு அவரை கடுமையாக விமர்சித்து கடிதம் ஒன்றுவர, டென்ஷன் ஆன அவர், “எனக்கு எந்த பதவியும் வேண்டாம்” என்ற மூடில் இருக்கிறார்.

இந்த நிலையில் கமல் வெளிப்படையாகவே பதவியை மறுத்திருக்கிறார்.

“விஷால் அணிக்கு, என் ஆதரவு எப்போதும் உண்டு. நடிகர் சங்க கட்டடத்தை நிச்சயம் கட்ட வேண்டும் என்பதே எனக்கும் விருப்பம். மற்றபடி நடிகர் சங்கத்தில், எனக்கு எந்த கவுரவ பதவியும் வேண்டாம்” என்று அறிவித்துவிட்டார் கமல்.

Leave a Reply

Your email address will not be published.