கமல் பகுத்தறிவாதியா? தமிழிசை கேள்வி

சென்னை:

ன்னை பகுத்தறிவாதி என்று கூறிக்கொள்ளும் நடிகர் கமல்ஹாசன்,  அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி, கொடியேற்றம் செய்தது ஏன் என்றும்,   கமல் பகுத்தறிவாதி என்று வேஷம் போடுகிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடுமையாக சாடி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, அமாவாசை தினமான நேற்று, கட்சி கொடியை கட்சி தலைமை அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் ஏற்றி, நிர்வாகிகளையும் அறிவித்தார்.

இதுகுறித்து செய்தியளார்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக  பாஜக தலைவர் தமிழிசை,  “நடிகர் கமலஹாசன் கட்சி துவங்கியதும், கொடியேற்றம் செய்ததும் அமாவாசை தினத்தில் தான். தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல்ஹாசன் ஏன் இந்த வேஷம் போட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக கூறியவர், வாக்குச்சாவடிக்கு ஒரு பா.ஜ.க பிரதிநிதி என்ற நோக்கில் வர இருக்கும்  தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். பா.ஜ.க யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று கூறிய தமிழிசை,  அழைக்காமலே கூட்டணிக்கு வர மாட்டோம் என சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி குறித்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

நாடு முழுவதும்  ஜி.எஸ்.டி வரியால் பல மாநிலங்கள் பயன்பெற்று உள்ளது என்றும்,  இந்தியாவில் பயன்பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது என்றும், அதுபோல  உதய் திட்டத்தால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தபட்டு உள்ளது என்றும் கூறினார்.

நீட் தேர்வில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக மாணவர்கள் பாதிக்கப் பட்டது தொடர்பான கேள்விக்கு  நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் வஞ்சிக்கபட கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகவும், நீட்  தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.