நடிகர் கமலை கைது செய்ய வேண்டும் : அமைச்சர் சி.வி.சண்முகம்

--

விழுப்புரம் :

டிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். இதையடுத்து தமிழக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரி மக்களையும் பெண்களையும் அவமானப்படுத்துவது போல பேசுகிறார்கள். கமலும் அப்படியே பேசி வருகிறார். கமல்தான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவர்தான் இதற்கு முழு பொறுப்பு.

அவர் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர். அவர் மீது  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

You may have missed