சர்கார் பட சர்ச்சை : படத்துக்கு கமல் ஆதரவு

சென்னை

ர்கார் படத்துக்கு அரசு சிக்கல் அளித்து வருவதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்து முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் தமிழ்த் திரைப்படத்துக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கதைத் திருட்டு விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டு படம் வெளியாகியதில் இருந்தே கடும் சர்ச்சை உண்டாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் தமிழக அரசையும் ஆளும் கட்சியான அதிமுகவையும் தாக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியது. அத்துடன் மதுரை உள்ளிட்ட ஓரிரு இடங்களில் அதிமுக பிரமுகர்கள் இந்த திரைபடத்தை ஓட்டக் கூடாது எனக் கூறியதாகௌவ்ம் செய்திகள் வந்தன.

இந்த சர்கார் படத்தின் தயாரிப்புக் குழு இந்த தகவல்களை அடுத்து படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் படம் இனி தடையின்றி ஓடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டிவிட்டரில், “முறையாக சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என பதிந்துள்ளார்.