சென்னை:

லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து என்று, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான  கமல் டுவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்காத தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் தெரிவித்த கடும் கண்டனத்தை தொடர்ந்து, அதுகுறித்து கமல் டுவிட் செய்துள்ளார்.

லோக்ஆயுக்தா வழக்கில், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்தும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்து, ஜூலை 10ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதுவரை லோக்ஆயுக்தா அமைக்காதற்கு கண்டமும் தெரிவித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,  நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

அவர் பதிவிட்டிருப்பதாவது, உச்ச நீதி மன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி.  இந்த அரசு, உச்ச நீதி மன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும் . லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து

என கூறி உள்ளார்.

கமல் ஏற்கனவே, மக்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியின்போது, ஆட்சிக்கு வந்தால் உங்களின் முதல் கையெழுத்து எதில் போடுவீர்கள்  என்ற கேள்விக்கு பதில் அளித்தபோது,  ஆட்சிக்கு வந்தா முதல் கையெழுத்துன்னு லோக்யுக்தா என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.