டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது கமல் காட்டம்

சென்னை

வ்வப்போது ட்விட்டரில் அரசியல் பதிவுகளை பதிவிட்டு சூட்டைக் கிளப்பி வரும் நடிகர் கமல், தற்போது டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது காட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதிமுக மூன்று பிரிவாக பிரிந்ததும்,  தற்போது இரு அணி ஒன்றானதால், தினகரன் அணி தனித்து இருப்பதும் தெரிந்ததே.    தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தற்போது ஊர் ஊராகச் சென்று சொகுசு விடுதிகளில் தங்கி வருகிறார்கள் அல்லவா.. அது குறித்துத்தான் ட்விட்டியிருக்கிறார் கமல்.

அவரது ட்விட் பதிவில் “பணிக்கு செல்லாமல் இருக்கும் ஆசிரியர்களை கண்டிக்கும் நீதிமன்றம் ரிசார்ட்டில் இருக்கும் எம்எல்ஏ-களையும் கண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் கமல்.

இதற்கு “வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை என்பது அரசியல் வாதிகளுக்குப் பொருந்தாதா? அரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் இந்த விதியா” என்னும் அர்த்தம் தெளிவாக தெரிவதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.