சென்னை

மல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் கிடைத்ததையொட்டி அவர் தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.  இதில் சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அ ம முக உள்ளிட்ட  பல கட்சிகளுக்கும் தமிழகத்தில் உள்ள அனைத்ஹ்டு தொகுதிகளுக்கும் அவரவர் கேட்ட பொதுச் சின்னங்கள் ஒதுக்கபட்டன. ஆனால் கமலஹாசன் கேட்ட டார்ச் லைட் சின்னம் அவருக்கு புதுச்சேரியில் ஒதுக்கப்பட்டு தமிழகத்தில் ஒதுக்கப்படவில்லை.0

ஆகவே மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் சுயேச்சைகளின் சின்னத்தில்  போட்டியிட வேண்டிய நிலை உண்டாந்து.  ஏற்கனவே தங்களுக்கு மக்களவை தேர்தலில் ஒதுக்கிய அதே டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் 2021 ஆம் வருடத் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி மீண்டும் முறையிட்டது.  இந்த டார்ச் லைட் சின்னத்தைப் பெற்ற கட்சி அதை வேண்டாம் என ஒதுக்கியது.

இதையொட்டி கமலஹாசன் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் கிடைத்துள்ளது.  இது குறித்து கமல் தனது டிவிட்டரில், “மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய  மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என பதிந்துள்ளார்.