டுவிட்டர் நேரலையில் இன்று கமல் மக்களுடன் சந்திப்பு: டுவிட்டரில் தகவல்

சென்னை:

க்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று  நேரலையில் மக்களை சந்திக்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி உள்ள நடிகர் கமலஹாசன் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தனது அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது பாதிக்கப்படும் பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழக மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்கும் வசித்து வரும்  சென்னை பட்டினம்பாக்கம் பகுதி கடற்கரைக்கு சென்று கடல் அரிப்புகளை பார்வையிட்டு அந்த பகுதி மக்களை சந்தித்து வந்தார்.

இந்த நிலையில்,  இன்று டுவிட்டர் மூலம் நேரலையில் மக்களை சந்திக்க உள்ளதாக கமல் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“வணக்கம்.  நான் இன்று  டிவிட்டர் நேரலையில் வர இருக்கிறேன். என்னிடம் கேட்க கேள்விகள் இருந்தால் என்னுடைய டிவிட்டர் ஹேண்டிலில் கமல்ஹாசனிடம் கேளுங்கள் என்ற ஹேஷ்டேக்கில் என்னிடம் கேட்கலாம். நான் அவற்றிற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன். காத்திருங்கள்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ஆனால் எந்த நேரத்தில் டுவிட்டரில் நேரலையில் விவாதிப்பார் என்பது குறித்து அறிவிக்கவில்லை.

You may have missed