மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அறிஞர்கள் விஞ்ஞானிகளை நாடுவேன்!: கமல்

சென்னை:

க்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அறிஞர்கள் விஞ்ஞானிகளை நாட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

வார இதழ் ஒன்றில் நடிகர் கமல் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அதில், நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவர் அளித்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:, ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும் இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும் என்றார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் விசயத்தில் அரசு முதலாளித்துவத்தை காட்டுகிறது.  வேலை நிறுத்தம் நாட்களில் 7 நாள் சம்பளம் பிடித்தம் என்பது அதிகப்படியான தண்டனையாகும். இது மாதிரியான சிக்கலுக்கு தீர்வையும் புது திட்டங்களையும் உருவாக்க வேண்டும். போக்குவரத்து உள்ளிட்டபல்வேறு பிரச்னை தீர்வுகளுக்காக அறிஞர் விஞ்ஞானிகளை நாட இருக்கிறேன்.  பிற கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் நாங்கள் சேர்த்துகொள்வோம். அரசியல் ரீதியாக எனக்கு ஏற்படுட்டுள்ள சந்தேகங்களை கேரள முதல்வர் பிரணாயி விஜயன் தீர்த்து வைக்கிறார்” என்று  கமல் தெரிவித்துள்ளார்.