‘சித்தி’ என்ற உறவை ட்விட்டரில் ட்ரெண்டாக்கிய கமலா ஹாரிஸின் பேச்சு

 

நியூயார்க் : 

னநாயகக் கட்சி சார்பில் 5 நாள் இணைய மாநாடு அமெரிக்காவில் நடந்து வருகிறது, இதனை அமெரிக்காவையும் தான்டி உலகம் முழுவதும் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.

முதல் நாள் மாநாட்டில் பேசிய மிச்செல் ஒபாமா அனைவரும் தவறாமல் வாக்ளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். நேற்று மூன்றாம் நாள் மாநாட்டில் பேசிய துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தனக்குக் குடும்பம், குடும்ப உறவுகள், சமுதாயக்கடமை குறித்து தனது தாயார் தனக்குச் சிறுவயது முதல் போதித்துள்ளதாகவும்.

குடும்ப நலன் எப்படி முக்கியமோ அப்படித்தான் தனக்கு நாட்டு மக்களின் நலனும் முக்கியம் என்றும் அதற்காகவே தன் வாழ்வை அர்பணித்துக்கொண்டு பல்வேறு பொதுநல வழக்குகளை நடத்தி வென்றாதகவும் நினைவு கூறிய கமலா ஹாரிஸ், தனது பேச்சினிடையில் குடும்ப உறவுகள் குறித்துப் பேசிய போது ‘சித்தி’ என்று தமிழில் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கானப் பிரச்சாரத்தில் இந்திய மொழியில் அதுவும் தமிழில் ‘சித்தி’ என்று குறிப்பிட்டது அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் குறிப்பாக தமிழர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் உணர்ச்சிப்பூர்வமானக் கருத்துகளைப் பதிவு செய்து வருவதைப்பார்த்த அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலரும் தற்போது சித்தி என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை இணையதளத்தில் தேடி வருகின்றனர்.

https://twitter.com/NarangVipin/status/1296284528634482690

கமலா ஹாரிஸின் தாயார் ஷ்யாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர் என்பதும் இவரது சித்தி சரளா கோபாலன் தற்போதும் இங்கு வசித்து வருகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதற்கு முன் கலிபோர்னியா மாகான அட்டர்னி ஜெனராலாகப் போட்டியிட்ட போது கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி பெசன்ட் நகரிலுள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் அவரது சித்தி சரளா கோபாலன் அர்ச்சனை செய்தது குறிப்பிடத்தக்கது.