வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது, அந்நாட்டின் செனட் சபையில் நடைபெறவுள்ள குற்ற விசாரணையை, துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தலைமையேற்று மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

ஏனெனில், அமெரிக்க அரசியலமைப்பின்படி, துணை குடியரசுத் தலைவர்தான், செனட் சபையின் தலைவராக இருப்பார்.

இந்த வகையில், இம்மாதம் 20ம் தேதி துணை அதிபராக பதவியேற்கவிருக்கும் கமலா ஹாரிஸ், செனட் சபையின் தலைவராகவும் பதவி வகிப்பார். அந்தவகையில், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் இவர் தலைமையில் விசாரணைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்.

இதனை உறுதிபடுத்தும் விதமாக, “கவலைப்படாதீர்கள் திரு.ஜனாதிபதி அவர்களே. விசாரணையில் நான் உங்களை சந்திக்கிறேன்” என்று டிவீட்டியுள்ளார் ஹாரிஸ்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நமது அரசியலமைப்பை முன்னோர்கள் வடிவமைத்தபோது, என்ன‍ைப் போன்ற ஒருவர் செனட்டராக இருப்பார் என்று நினைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், டொனால்ட் டிரம்ப் போன்ற ஒருவர், அமெரிக்க அதிபராக வருவார் என்பதை கணித்திருக்கிறார்கள்” என்றுள்ளார் ஹாரிஸ்.